உரோமச முனிவரின் வேண்டுக்கோளுக்கு இணங்கி பகவான் தனது இடது காலைத் தூக்கி, திரிவிக்ரமக தரிசனத்தை காட்டியருளிய ஸ்தலம். அதனால் இங்கு எழுந்தருளியுள்ள பெருமாளுக்கு 'தாடாளன்' என்ற திருநாமமும் உண்டு.
மூலவர் 'திரிவிக்ரமன்' என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், உலகளந்த திருவுருவம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் திரிவிக்ரம நாராயணன். தாயார் பரிமள 'லோகநாயகி' என்றும் உத்ஸவ தாயார் 'மட்டவிழ்குழலி' என்றும் வணங்கப்படுகின்றார். உரோமச முனிவருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
பிரம்மாவுக்கு தன் ஆயுளைப் பற்றிய கர்வம் உண்டானபோது, 'உன் ஆயுளும், என் ஒரு ரோமமும் சமம்' என்று சொல்லி உரோசம முனிவர் அவரது கர்வத்தை அடக்கிய ஸ்தலம். மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்த தலம்.
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|